செய்து அசத்துவோம் தீப்பெட்டி பம்பரம்


தேவையான பொருள்கள்:


ஒரு வெற்றுத் தீப்பெட்டி, ஒரு தீக்குச்சி, கத்தரிக்கோல் (பெரியது)


செய்முறை:


1.            தீப்பெட்டியில் உள்ள குச்சிகள் போடும் பெட்டியை உருவி எடுத்துவிட்டு, மேல் அட்டையை மட்டும் அழுத்தி மட்டமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு படம் 1 இல் காட்டியபடி நான்கு சம பாகமாகப் பிரித்து கோடிட்டு கத்தரிக்கவும்.


2.            இப்பொழுது நான்கு சம அளவுள்ள பட்டைகள் கிடைத்துவிடும்.


3.            இப்போது படம் 2-இல் காட்டியுள்ளதைப்போல ஒரு பட்டையினுள் இன்னொரு பட்டையைச் செருகவும்.


4.            இதுபோல மற்ற பட்டைகளையும் படம் 4இல் உள்ளதுபோல ஒன்றினுள் ஒன்றாகச் செருகிக் கொள்ளவும்.


5.            பின்பு படம் 5இல் உள்ளதுபோல நான்கு பட்டைகளையும் நெருக்கமாக வைக்கவும். நடுவில் ஒரு சிறு துளை ஏற்படும்.


6.            அந்தத் துளையினுள் தீக்குச்சியைச் செருகிக் கொள்ளுங்கள். (தீக்குச்சியின் தலைப்பக்கம் கீழ்ப்புறம் வெளியே தெரியும்படி வைக்கவும்.) தீக்குச்சி நகராதபடி இறுக்கிக் கொள்ளுங்கள்.


7.            இப்போது வழவழப்பான தரையில் சுழற்றி விடுங்கள். கட்டைப் பம்பரம் போல நீங்கள் செய்த அட்டைப் பம்பரம் அழகாகச் சுழலுவதைப் பார்த்து மகிழுங்கள், குழந்தைகளே! செய்து பாருங்கள்